Paristamil Navigation Paristamil advert login

மருத்துவத்துறைக்கு மேலதிகமாக 32 பில்லியன் யூரோக்கள் நிதி!

மருத்துவத்துறைக்கு மேலதிகமாக 32 பில்லியன் யூரோக்கள் நிதி!

13 தை 2024 சனி 18:58 | பார்வைகள் : 2683


பிரதமர் கேப்ரியல் அத்தால் இன்று சனிக்கிழமை Dijon பல்கலைக்கழக மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அவருடன் தொழிலாளர் அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சரும் உடன் பயணித்திருந்தனர்.

மருத்துவமனை ஊழியர்களைச் சந்தித்து உரையாடிய அவர், மருத்துவத்துறையில் இருக்கும் சவால்கள் குறித்து கேட்டறிந்தார். அதன் பின்னர் மருத்துவமனைகளின் மேம்படுத்தலுக்காக 32 பில்லியன் யூரோக்கள் நிதியினை அரசு ஒதுக்கும் என உறுதியளித்துவிட்டு வந்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், (Elisabeth Borne பிரதமராக இருக்கும் போது சென்ற டிசம்பவர் மாத ஆரம்பத்தில் நிறைவேற்றப்பட்டது.) தற்போது மேலதிகமான இந்த 32 பில்லியன் யூரோக்களை பிரதமர் கேப்ரியல் அத்தால் அறிவித்துள்ளார்.

”எங்களுடைய மருத்துவமனைகளும், மருத்துவர்கள், ஊழியர்களும் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம். அவர்கள் நாட்டின் நலனுக்கான தினமும் உழைக்கின்றனர். மருத்துவமனைகளை மேன்மைப்படுத்தவும், ஊதியத்தை அதிகரிக்கவும் இந்த தொகை பயன்படும்” என கேப்ரியல் அத்தால் குறிப்பிட்டார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்