Paristamil Navigation Paristamil advert login

ஹமாஸிடம் பிடிபட்டுள்ள பிரெஞ்சு மக்களை நினைவுகூர்ந்த ஜனாதிபதி மக்ரோன்!

ஹமாஸிடம் பிடிபட்டுள்ள பிரெஞ்சு மக்களை நினைவுகூர்ந்த ஜனாதிபதி மக்ரோன்!

13 தை 2024 சனி 20:21 | பார்வைகள் : 2226


ஹமாஸ் அமைப்பினர் ஹமாஸ் எல்லைக்கு அருகே தாக்குதல் மேற்கொண்டு நூற்றுக்கணக்கான பணயக்கைதிகளை பிடித்துச் சென்று இன்றோடு நூறு நாட்கள் ஆகின்றன.

பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களில் பல பிரெஞ்சு மக்களும் உள்ளனர். அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டுள்ள போதும், மூன்று பேர் தொடர்பில் இதுவரை தகவல்கள் இல்லை. அவர்கள் தொடர்ந்தும் ஹமாஸின் பிடிக்குள் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இன்றைய நாளில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சிறிய காணொளி ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.

“பிரான்ஸ் தனது பிள்ளைகளைக் கைவிடவில்லை, அதனால்தான் அவர்களின் விடுதலைக்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் மீண்டும் மேற்கொள்கிறது.” எனவும், “நாங்கள் ஒருபோதும் எந்த தியாகத்தைச் செய்யவும் தயாராக இல்லை. அவர்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்து வருவோம்” எனவும் குறித்த காணொளியில் ஜனாதிபதி மக்ரோன் குறிப்பிட்டார்.

*****

ஹமாஸ் அமைப்பினரிடம் Orión Hernández Radoux (32 வயது) Ofer Kalderon (53வயது) , Ohad Yahalomi (49 வயது) ஆகிய மூன்று பிரெஞ்சு நபர்களே சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்