Paristamil Navigation Paristamil advert login

யாழில் இடம்பெற்ற விபத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் பலி

யாழில் இடம்பெற்ற விபத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் பலி

14 தை 2024 ஞாயிறு 01:55 | பார்வைகள் : 4446


யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி - கோரியடிப் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணிபுரியும் வெற்றிலைக்கேணியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான யேசுதாஸ் அன்ரன் பிலிப்பின் தாஸ் என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

வெற்றிலைக்கேணி கரையோர வீதியால் மருதங்கேணி நோக்கிச் சென்று கொண்டிருந்த இராணுவ உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்