கிளிநொச்சியில் கால்வாயிலிருந்து மீட்கப்பட்ட 2 இளைஞர்களின் சடலங்களால் அதிர்ச்சி

14 தை 2024 ஞாயிறு 06:50 | பார்வைகள் : 7001
கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் உள்ள நீர்பாசன கால்வாயிலிருந்து இளைஞர்கள் இருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு விபத்தினால் இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேக கட்டுப்பாட்டை இழந்து, வீதி குறியீடுகளை உடைத்து நீர்பாசன வாய்க்காலிற்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவத்தில் கிளிநொச்சி கல்மடு பகுதியை சேர்ந்த 20 வயதுடைய தயாளன் தனுசன் மற்றும் அழகாபுரி பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கிருஸ்ணன் சதீசன் ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மரண விசாரணை மேற்கொண்ட கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி அவர்கள், உயிரிழந்தவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டதுடன், உறவினர்களிடம் மரணம் தொடர்பான சந்தேகங்களையும் கேட்டறிந்தார்.
உறவினர்களால் சடலம் அடையாளம் காட்டப்பட்டதை தொடர்ந்து, சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.
அத்துடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
மேலதிக விசரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1