என் அழகிய மகளின் பிறந்தநாள்...! டேவிட் வார்னர்

14 தை 2024 ஞாயிறு 09:18 | பார்வைகள் : 5065
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மகளின் பிறந்தநாளுக்கு, இந்திய ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் ஓய்வு பெற்றார்.
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடியபோது டேவிட் வார்னருக்கு இந்திய ரசிகர்களிடம் ஆதரவு குவிந்தது.
பின்னர் அவர் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு மாறினாலும், இந்தியாவை அவர் விரும்புவது இந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதனால் டேவிட் வார்னரின் ஒவ்வொரு பதிவிற்கும் இந்திய ரசிகர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் வார்னரின் மகள் பிறந்த நாளுக்கு இந்திய ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
டேவிட் வார்னர் தனது மகள் Indi rae-வுக்காக வெளியிட்ட பதிவில், 'எனது அழகான Indi-க்கு 8வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாங்கள் உன்னை நேசிக்கிறோம். உனக்கு இது ஒரு சிறந்த நாள் என்று நம்புகிறேன்' என கூறியுள்ளார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1