Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யாவின்  தாக்குதலை முறியடித்த உக்ரைன்

ரஷ்யாவின்  தாக்குதலை முறியடித்த உக்ரைன்

14 தை 2024 ஞாயிறு 09:56 | பார்வைகள் : 5382


உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் உக்ரைனும் அதனை முறியடித்து வருகிறது.

அதேபோன்று நேற்றிரவும் உக்ரைன் மீது ரஷ்யா திடீர் ரொக்கெட் தாக்குதலை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த 2022ம் ஆண்டு பெப்ரவரி 24ம் திகதி தொடங்கிய நிலையில், இந்த போர் நடவடிக்கையானது இன்னும் சில தினங்களில் 2 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது.

இதுவரை நடந்த போர் தாக்குதலில் பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர், பலர் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர்.

இருப்பினும் உக்ரைன் வான் பாதுகாப்பு பகுதியை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்றிரவு உக்ரைனிய நகரங்களை குறி வைத்து ரஷ்யா 40 ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 8 ஏவுகணைகளை துணிவுடன் எதிர்கொண்டு வீழ்த்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

மேலும், உக்ரைனின் மின்னணு வான் தடுப்பு சாதனங்கள் மூலம் ரஷ்யாவால் ஏவப்பட்ட மேலும் 20 ஏவுகணைகள் இலக்கை அடையாமல் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்