Paristamil Navigation Paristamil advert login

பிக்பாஸ் இறுதி போட்டியாளர்களை ஆச்சரியப்படுத்திய கமல்...!

பிக்பாஸ் இறுதி போட்டியாளர்களை ஆச்சரியப்படுத்திய கமல்...!

14 தை 2024 ஞாயிறு 12:12 | பார்வைகள் : 1092


பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே இன்று மாலை ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் காட்சி இருப்பதை அடுத்த பிக் பாஸ் போட்டியாளர்கள் ஆச்சரியத்தின் உச்சிக்கே செல்கின்றனர்.

இன்று பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே மிகவும் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. விஜய் டிவி பிரபலம் மகாலிங்கம் பாடிய பாட்டுக்கு இறுதிக்கு தகுதி பெற்ற போட்டியாளர்கள் ஆட்டம் போடுகின்றனர்

இந்த நிலையில் கமல்ஹாசன் பெருமை குறித்த பாடலை பாடி கொண்டிருக்கும்போது திடீரென பிக் பாஸ் வீட்டின் கதவு திறக்க கமல்ஹாசன் உள்ளே வருகிறார். இதை பார்த்து ஆச்சரியமடைந்த 5 போட்டியாளர்களும் அவருடைய காலில் விழுந்து ஆசி பெறுகின்றனர்

அதன்பின் சில வாழ்த்து குறிப்புகளை தனது கையாலே எழுதிய கமல்ஹாசன், ஒவ்வொருவருக்கும் வழங்கியதோடு அனைத்து போட்டியாளருக்கும் சிறப்பு பரிசுகளையும் வழங்குகிறார். இதுகுறித்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்