Paristamil Navigation Paristamil advert login

லைகாவின் சூப்பர் பொங்கல் பரிசு அறிவிப்பு..!

லைகாவின் சூப்பர்  பொங்கல் பரிசு அறிவிப்பு..!

14 தை 2024 ஞாயிறு 12:49 | பார்வைகள் : 1630


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணியையும் இன்னொரு பக்கம் தொடங்கப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

குறிப்பாக நாளை பொங்கல் தினத்தில் ரஜினி ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக இந்த படத்தின் கலர்ஃபுல் போஸ்டர் ஒன்று வெளியிடப் போவதாக லைகா நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது. இது குறித்த வீடியோவையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நாளை வெளியாகும் கலர்ஃபுல் போஸ்டரை ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்து வரும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில், ரானா டகுபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்