Paristamil Navigation Paristamil advert login

அரிய கின்னஸ் சாதனை படைத்த குடும்பம்!

அரிய கின்னஸ் சாதனை படைத்த குடும்பம்!

14 ஆடி 2023 வெள்ளி 07:40 | பார்வைகள் : 2607


பாகிஸ்தானின் லர்கானாவைச் சேர்ந்த அமீர் அலியின் குடும்பத்தினர் ஒரே திகதியில் பிறந்ததற்காக, அந்த குடும்பம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

இந்த அற்புதமான கதையை கின்னஸ் உலக சாதனை புத்தகம் பகிர்ந்துள்ளது.

அமீர் அலி பாகிஸ்தானின் லர்கானாவை பூர்வீகமாக கொண்டவர். அலியின் குடும்பம் அவரது மனைவி குதேஜா மற்றும் ஏழு குழந்தைகளைக் கொண்டது.

7 குழந்தைகளில் நான்கு பேர் இரட்டையர்கள். அனைவரும் 19 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். தற்செயலாக எல்லோருடைய பிறந்தநாளும் 1-ஆம் திகதி ஆகும்.

ஆமிர் மற்றும் குதேஜாவின் திருமண நாளும் ஓகஸ்ட் 1 தான் என்பது மற்றொரு ஆச்சரியம். அலி மற்றும் குதேஜா ஆகஸ்ட் 1, 1991-ல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த குடும்பம் இரண்டு அரிய சாதனைகளைக் கொண்டுள்ளது.

முதலாவது, ஒரே திகதியில் ஒன்பது குடும்ப உறுப்பினர்கள் பிறந்ததற்கான உலக சாதனை, மற்றொன்று அதே திகதியில் பிறந்த அதிக உடன்பிறப்புகளுக்கான சாதனை.

முன்னதாக, அமெரிக்காவைச் சேர்ந்த கம்மின்ஸ் குடும்பம் 'ஒரே திகதியில் பிறந்த பெரும்பாலான உடன்பிறப்புகள்' என்ற சாதனையைப் படைத்தது. 1952 முதல் 1966 பெப்ரவரி 20-ஆம் திகதியில் கம்மின்ஸ் குடும்பத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்