Paristamil Navigation Paristamil advert login

பல் சொத்தை ஏன் வருகிறது தெரியுமா..?

பல் சொத்தை ஏன் வருகிறது தெரியுமா..?

14 தை 2024 ஞாயிறு 13:05 | பார்வைகள் : 2313


பல்லில் ஏற்படும் குழிகளையே சொத்தை என நாம் அழைக்கிறோம். வெள்ளை நிறத்தில் பல்லுக்கு உறைபோல் அமைந்திருக்கும் எனாமல் (Enamel) பகுதி தேய்வதாலேயே சொத்தை ஏற்படுகிறது. பற்களைச் சுற்றியிருக்கும் எனாமல் மிகவும் கடினத்தன்மை வாய்ந்தது. பல் சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். வருடத்திற்கொறுமுறை பற்களை சுத்தப்படுத்துவதன் மூலம் சொத்தை ஏற்படுவதை தவிர்க்கலாம்.

சொத்தை ஏற்படுவதற்கு பாக்டீரியா தான் காரணம். இவை சர்க்கரையை உடைத்து பற்களின் மேற்பரப்பில் ஆசிடாக பரவச் செய்கிறது. பற்களின் எனாமல் கால்சியம் மற்றும் பாஸ்பேட் தாதுக்களால் ஆனது. ஆனால் பல்லில் படியும் கசடுகள் இந்த தாத்துக்களை அழித்துவிடுகின்றன. எனாமல் தேயத் தேய பல்லில் சிறிய குழி உருவாகிறது. நாளடைவில் இது பல் சொத்தையாக மாறுகிறது.

இளைஞர்களுக்கு அதிகளவில் பல் சொத்தை பிரச்சனை இருந்தாலும், இது எந்த வயதினருக்கும் வரலாம். சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை அதிகமாக எடுத்துக்கொள்ளும் குழந்தைகள் மற்றும் ஒழுங்காக பற்களை பிரஷ் செய்யாதவர்களுக்கு சொத்தை வர அதிக வாய்ப்புள்ளது.

பெரியவர்களுக்கும் பல சொத்தை வரலாம். மேலும் இவர்களின் ஈறுகள் காலப்போக்கில் வலு குறைந்து காணப்படும். இதுபோன்ற சுழ்நிலை பல் சொத்தை வருவதற்கு காரணமாக இருக்கும்.

வைட்டமின் டி குறைபாடு இருப்பவரக்ளுக்கு பற்களில் சிதைவு ஏற்படும். சோடா போன்ற குளிர்ச்சியான பானங்களை அடிக்கடி குடிப்பதால் பற்கள் சொத்தையாகிறது. நெஞ்செரிச்சலும் கூட பற்களை சேதபடுத்துகிறது. இரவில் தாமதமாக சாப்பிடுவது மற்றும் ஒழுங்காக பற்களை பிரஷ் செய்யாமல் இருப்பதும் சொத்தையை ஏற்படுத்தும்.

ஆயில் புல்லிங் :  பழங்காலம் தொட்டே ஆயில் புல்லிங் பின்பற்றபட்டு வருகிறது. நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை வாயில் இட்டு 20 நிமிடங்களுக்கு பற்களில் படுமாறு வைத்திருக்க வேண்டும். உடலில் உள்ள நச்சுக்களை ஆயில் புல்லிங் செய்வதால் வெளியேற்றலாம் எனக் கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லையென்றாலும், ஆயில் புல்லிங் செய்வது chlorhexidine பயன்படுத்தி வாய் கொப்பளிக்கும் போது கிடைக்கும் பயனைத் தருவதாக கூறப்படுகிறது. ஆயில் புல்லிங் செய்வதால் வாயில் உள்ள பாக்டீரியாவின் எண்ணிக்கை குறைகிறது.

அதிமதுரம் :  பல் சொத்தையை ஏற்படுத்தும் பாக்டீரியாவை எதிர்த்து போரிடுவதில் முக்கிய பங்காற்றுகிறது அதிமதுரம். அதிமதுர சாறை பயன்படுத்தி வாய் கழுவுவதால் பற்களைச் சேதப்படுத்தும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறது.

ஃபுளோரைட் டூத் பேஸ்டை பயன்படுத்துங்கள் : சொத்தை ஏற்படுவதை தவிர்க்கவும், எனாமலில் உள்ள தாதுக்கள் குறையாமல் இருக்கவும் ஃபுளோரைட் மிகவும் அவசியம். டுளோரைடு உள்ள டூத் பேஸ்டை பயன்படுத்தி தினமும் பிரஷ் செய்வதால் ஈறுகளும் பற்களும் ஆரோக்கியம் பெறுகிறது. மேலும் பற்களில் கிருமிகள் சேர்வதும் தடுக்கப்படுகிறது. தேவைப்பட்டால் பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்