Paristamil Navigation Paristamil advert login

சர்க்கரை பொங்கல்

 சர்க்கரை பொங்கல்

14 தை 2024 ஞாயிறு 13:09 | பார்வைகள் : 1862


இந்த பொங்கல் பண்டிகைக்கு சற்று வித்தியாசமாக இன்னும் சுவையான கோவில் பிரசாதமாக கொடுக்கப்படும் சர்க்கரை பொங்கலை வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுங்கள். ரசித்து சாப்பிடுவார்கள்!

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

வெல்லம் - 1/4 கிலோ

தேங்காய் - 4 முதல் 5 பத்தை

முந்திரி - தேவைக்கேற்ப

உலர்ந்த திராட்சை - தேவைக்கேற்ப

சுத்தமான பசு நெய் - 7 முதல் 8 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் அரிசியை நன்றாக கழுவிய பின்னர் நிறைய தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளுங்கள். நன்றாக குழைந்து வெந்த பின்னர் சாதத்தை வடிக்காமல் சல்லடை பாத்திரத்தில் போட்டு வேகவைத்த தண்ணீரை இறுத்துக் கொள்ளுங்கள். அதன்பின் சாதத்தை அதே சட்டியில் சிறிது நேரம் அடுப்பில் வைத்து கரண்டியால் மசித்து விட வேண்டும்.

அதன்பின்னர் வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டி அதை குழைந்த சாதத்தில் சேர்த்து நன்றாக கலக்குங்கள். சாதமும் வெல்லமும் நன்றாக கலக்கும் வரை நன்றாக கிளறிக் கொள்ளுங்கள். நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து இரக்கலாம்.

பொங்கலை தாளிக்க வேரு ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி உருகியதும் முந்திரி, உலர் திராட்சையை நெய்யில் நன்றாக வறுத்து பொன்நிறமானதும் அதை பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறுங்கள். அதன்பின் ஏலக்காய் பொடியையும் சேர்த்து கிளறுங்கள்.

இறுதியாக கோவில் பிரசாதத்தில் மட்டும் சேர்க்கப் படும் பச்சை கற்பூரத்தை ஒரு சிட்டிகை மட்டும் சேர்த்து கிளறினால் கோவில் பிரசாத சுவையில் சர்க்கரை பொங்கல் தயார்.!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்