100 நாட்களை கடந்த இஸ்ரேல் - ஹமாஸ் போர்...
14 தை 2024 ஞாயிறு 13:29 | பார்வைகள் : 3294
இஸ்ரேல் படைகள் தொடர்ந்து காசா மீது வான்வெளி தாக்குதலை நடத்தி வருகின்றது.
இதுவரை 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளதாக சேவ் தி சில்ரன் அமைப்பின் இயக்குனர் ஜேசன் லீ தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
“காசாவில் வசித்து வரும் 11 லட்சம் குழந்தைகளில் 10,000க்கும் அதிகமான குழந்தைகள் பலியானதால், மொத்த குழந்தை மக்கள் தொகையில் 1% பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இந்த கொலைகள் நடந்துள்ளன.
இந்த தாக்குதலில் இருந்து தப்பிய குழந்தைகள், உடலில் காயங்களுடன் போதிய மருத்துவ வசதியின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தங்களது பெற்றோரை இழந்து பல்வேறு கொடுமைகளைச் சந்தித்து வருகின்றனர்.
காசாவில் மட்டும் சுமார் 1,000 குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு கால்களையும் இழந்துள்ளனர்.” என சுட்டிக்காட்டியுள்ளார்.