பரிஸ் : விடுதி அறையில் இருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு!!

14 தை 2024 ஞாயிறு 15:04 | பார்வைகள் : 12750
பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள விடுதியில் இருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று ஜனவரி 13, சனிக்கிழமை நண்பகலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 17 ஆம் வட்டாரத்தின் Porte de Clichy மற்றும் Parc des Batignolles பகுதிகளுக்கிடையே உள்ள விடுதி ஒன்றின் (hotel) அறையில் இருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
விடுதி நிர்வாகத்தினர் காவல்துறையினரை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்ததன் பின்னர் சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் விரைந்து சென்றனர்.
44 வயதுடைய பெண்ணே கட்டிலில் இறந்து கிடந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.