யாழ்ப்பாணத்தில் கைக்குண்டுடன் சிக்கிய நபர்

15 தை 2024 திங்கள் 04:16 | பார்வைகள் : 5140
இளவாலை பகுதியில், கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இளவாலை பகுதியில் உள்ள விடு ஒன்றினை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர் என சந்தேகித்து, குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்காக இளவாலை பொலிஸார் இன்றையதினம் அவரது வீட்டிற்கு சென்றனர்.
இதன்போது அவரது வீட்டில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டதுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.