பனிச்சறுக்கு விளையாடும் கனேடியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

15 தை 2024 திங்கள் 07:39 | பார்வைகள் : 6021
கனடாவின் ரொறன்ரோவில் சில இடங்களில் பனிச்சறுக்கு விளையாட்டுக்களில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
சுமார் 45 மலைப் பகுதிகளில் பனிச்சறுக்கில் ஈடுபடுவது ஆபத்தானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோவின் நகர நிர்வாகம் இது தொடர்பிலான தடையை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மலை உச்சிலிருந்து கீழே பனிச்சறுக்கில் ஈடுபடும் போது இடையில் காணப்படும் மரங்கள் போன்ற பொருட்களினாலும், குழிகள் போன்றவற்றினாலும் ஆபத்து ஏற்படக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடும் போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பகுதிகளில் பனிச்சறுக்கில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1