Paristamil Navigation Paristamil advert login

புயல்வேகத்தில் கோல் அடித்த எம்பாப்பே! முதலிடத்தில் நீடிக்கும் PSG

புயல்வேகத்தில் கோல் அடித்த எம்பாப்பே! முதலிடத்தில் நீடிக்கும் PSG

15 தை 2024 திங்கள் 07:45 | பார்வைகள் : 1100


லிகு 1 தொடரில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் லென்ஸ் அணியை வீழ்த்தியது.

Stade Bollaert-Delelis மைதானத்தில் நடந்த போட்டியில் Paris Saint-Germain மற்றும் Lens அணிகள் மோதின.

ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் எம்பாப்பே பாஸ் செய்த பந்தை, PSG வீரர் பிராட்லி பார்கோலா (Bradley Barcola) நேர்த்தியாக கடத்திச் சென்று அபாரமாக கோல் அடித்தார். 

அதனைத் தொடர்ந்து, 45+3வது நிமிடத்தில் பந்தை கடத்திச் சென்ற பிராட்லி பார்கோலாவை, லென்ஸ் (Lens) அணி வீரர் ஜோனதன் கிராடிட் தன் காலால் தடுக்க அவர் கீழே விழுந்தார்.

உடனே கமெராவில் பார்த்த நடுவர் ஜோனதனுக்கு சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றினார். இதன் காரணமாக இரண்டாம் பாதியில் லென்ஸ் அணி 10 வீரர்களுடன் ஆடியது.

எனினும் 89வது நிமிடம் வரை PSG அணிக்கு லென்ஸ் வீரர்கள் நெருக்கடி கொடுத்தனர். ஆனால், கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) புயல்வேகத்தில் செயல்பட்டு மிரட்டலாக கோல் அடித்தார். 

இதன்மூலம் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. லிகு 1 தொடரின் புள்ளிப்பட்டியலில் 13 வெற்றிகளுடன் (18 போட்டிகள்) முதலிடத்தில் நீடிக்கிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்