கௌதம் அதானியை வியக்கவைத்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்
15 தை 2024 திங்கள் 07:50 | பார்வைகள் : 2072
ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் வீரருக்கு உதவ இந்தியாவின் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் கவுதம் அதானி (Gautam Adani) முன்வந்துள்ளார்.
34 வயதான மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் அமீர் உசேனுக்கு அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தனது அறக்கட்டளை மூலம் உதவ முன்வந்துள்ளார்.
அமீர் உசேனின் உணர்ச்சிகரமான கதை அற்புதமானது என்று கெளதம் அதானி கூறியுள்ளார்.
"உங்கள் தைரியம், விளையாட்டின் மீதான அர்ப்பணிப்பு மற்றும் பாதகமான சூழ்நிலைகளில் ஒருபோதும் கைவிடாத மனப்பான்மை ஆகியவற்றை நாங்கள் வணங்குகிறோம். உங்கள் போராட்டம் எங்கள் அனைவருக்கும் உத்வேகம்.
மேலும், அதானி அறக்கட்டளை விரைவில் அமீரைத் தொடர்பு கொள்ளும் என்றும், அவருக்கு உதவ எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் " என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், வாகாமா கிராமம் பிஜ்பெஹாராவைச் சேர்ந்த அமீர் உசேன் தற்போது ஜம்மு காஷ்மீரின் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார்.
அமீர் உசேன் தனது 8 வயதில் சிறுவயதில் ஒரு வலிமிகுந்த விபத்துக்கு உள்ளானார். விபத்து காரணமாக அவரது இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டது.
கிரிக்கெட் பேட் தயாரிக்கும் இயந்திரம் அவரது கைகளில் அடிபட்டது. அவர் சுமார் மூன்று ஆண்டுகள் மருத்துவமனையில் இருந்தார். தந்தை பஷீர் அகமது வவ்வாலின் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். மகனின் உயிரைக் காப்பாற்ற எல்லாவற்றையும் விற்றுவிட்டார்.
ஐந்து உடன்பிறப்புகளில் ஹுசைன் இரண்டாவது நபர் ஆவார். அவருக்கு மூன்று சகோதரர்கள் மற்றும் ஒரு தங்கை உள்ளனர்.
சிறுவயதில் விபத்துக்கு பிறகும், அமீர் உசேன் தனது கனவை கைவிடவில்லை. கையை இழந்த பிறகு, மட்டையைப் பிடிக்கும் வித்தியாசமான பாணியைக் கடைப்பிடித்தார்.
உசேன் தனது தோளுக்கும் கழுத்துக்கும் இடையில் மட்டையை மாட்டிக்கொண்டு அசாதாரணமாக துடுப்படுகிறார்.
பந்தை கால்விரல்களுக்கு இடையில் வைத்து சுழற்பந்து வீச்சையும் செய்கிறார்கள். அவர் தொடர்ந்து பயிற்சி செய்தார், ஒரு நாள் அவரது கனவு நனவாகியது.
2013ல் ஹுசைனுக்கு அங்கீகாரம் கிடைத்தது. இவரின் திறமையை கண்டு 2013ல் ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார். விரைவில் அவர் இந்த அணியின் கேப்டனாகவும் ஆனார்.
2014-ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கிட்டத்தட்ட ஒரு வருடம் விளையாட்டிலிருந்து விலகி இருந்தார். 2015ல், அவர் மாநிலங்களுக்கு இடையேயான பாரா போட்டியில் மீண்டும் திரும்பி அணியை சாம்பியனாக்கினார்.