Paristamil Navigation Paristamil advert login

உக்ரைனுடன் இணைந்து சுவிட்சர்லாந்தின் அமைதி பேச்சுவார்த்தை... 83 நாடுகள் பங்கேற்பு

உக்ரைனுடன் இணைந்து சுவிட்சர்லாந்தின் அமைதி பேச்சுவார்த்தை... 83 நாடுகள் பங்கேற்பு

15 தை 2024 திங்கள் 07:58 | பார்வைகள் : 3306


உக்ரைனுடன் சுவிட்சர்லாந்தும் இணைந்து முன்னெடுக்கும் அமைதி பேச்சுவார்த்தையில் 80க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த  பேச்சுவார்த்தையில் ரஷ்யாவை சேர்த்துக்கொள்வது தொடர்பில் சில வழிகளை ஆலோசித்து வருவதாக சுவிஸ் குறிப்பிட்டுள்ளது. 

மொத்தம் 83 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் உக்ரைனில் நீடித்த மற்றும் நியாயமான அமைதிக்கான 10 அம்ச கோரிக்கைகளை ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்வைத்ததன் அடிப்படையில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையானது சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் Ignazio Cassis மற்றும் உக்ரைன் ஜனாதிபதியின் ஆதரவாளரான Andriy Yermak ஆகியோர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு முன்னர் தயாராவதே இந்த சந்திப்பின் நோக்கம் என்று சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் Ignazio Cassis குறிப்பிட்டுள்ளார். 

ஒருகட்டத்தில் இந்த பேச்சுவார்த்தையில் ரஷ்யா உட்படுத்த வேண்டும் என்பதற்கான வழிகளை உருவாக்க வேண்டும் என்றார்.

ஆனால் தற்போது வரையில் இரு நாடுகளும் அந்த முடிவுக்கு வரவில்லை என்றே அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நான்காவது சுற்று பேச்சுவார்த்தையானது சுவிட்சர்லாந்தின் Davos பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐந்து நாட்கள் முன்னெடுக்கப்படும் உலக பொருளாதார மன்றம் சுவிட்சர்லாந்தில் முன்னெடுக்கப்படுகிறது. திங்கட் கிழமை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சுவிஸ் செல்லவிருக்கிறார். 

சீனாவின் Li Qiang உட்பட முக்கிய தலைவர்கள் பலர் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்க உள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்