Paristamil Navigation Paristamil advert login

சீனப் பெருஞ்சுவரில் உலகின் மிக நீளமான ஓவியம் : கின்னஸ் சாதனை படைத்த பெண்

சீனப் பெருஞ்சுவரில் உலகின் மிக நீளமான ஓவியம் : கின்னஸ் சாதனை படைத்த பெண்

15 தை 2024 திங்கள் 08:53 | பார்வைகள் : 2115


சீனாவைச் சேர்ந்த குவோ ஃபெங் என்ற பெண் ஓவியர், சீனப் பெருஞ்சுவரின் மேல் உலகின் மிக நீளமான ஓவியத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

அவரின் இந்த சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆயிரத்து 14 மீட்டர் நீளமுள்ள ஓவியத்தை, கேன்வாஸில் 'காலப்போக்கில் நாகரிகத்தின் வளர்ச்சி' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு அவர் வரைந்துள்ளார்.

சீனப் பெருஞ்சுவரின் மேல் 60 நாட்களுக்கும் மேலாக அமர்ந்து இந்த பிரமிக்க வைக்கும் ஓவியத்தை குவோ ஃபெங் வரைந்துள்ளார்.  

இதேவேளை, உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட சீனப் பெருஞ்சுவர், உலகின் ஏழு அதிசயங்களில் முதன்மையானதாகக் காணப்படுகின்றது.

சீனாவின் மலைகளுக்கு இடையே நீண்டதாக கட்டப்பட்ட சீனப் பெருஞ்சுவர் அந்நியப் படையெடுப்பை சீனாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற பாதுகாப்பு நோக்கத்திற்காக கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதற்கான கட்டுமானப் பணிகள் கி.மு 3 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டதுடன், 21 ஆயிரத்து 190 கிலோ மீற்றர் நீளத்தில் குறித்த சுவர் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்