Paristamil Navigation Paristamil advert login

வெற்றி பெறும் வரை போர் தொடரும் - நெதன்யாகு சூளுரை

வெற்றி பெறும் வரை போர் தொடரும் - நெதன்யாகு சூளுரை

15 தை 2024 திங்கள் 09:50 | பார்வைகள் : 2569


இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7-ம் திகதி தொடங்கியது. 

தற்போது போர் 100-வது நாளை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்தப்போரில் பாலஸ்தீன மக்களில் பெண்கள்,குழந்தைகள் என 22 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன நிர்வாகம் தெரிவித்துள்ளது.   

இதேவேளையில் எகிப்து- காசா எல்லையின் கீழ் சுரங்கப்பாதை உள்ளது. 

இது காசாவிற்கு ஒரு முக்கிய விநியோக பாதையாக காணப்படுகின்றது. 

இந்தப் பாதையை மூடும் வரை நாங்கள் போரை நிறுத்தமாட்டோம்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

“எங்களை யாரும் தடுக்கமாட்டார்கள். வெற்றி பெறும் வரை போர் தொடரும். காசாவில் நடத்திய இராணுவ தாக்குதலில், பெரும்பாலான ஹமாஸ் படையினரை அகற்றிவிட்டோம். ஒரு சர்வதேச சட்டம் உள்ளது. அது ஒரு எளிய விடயத்தைச் சொல்கிறது.

வடக்கு காசாவில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் எந்த நேரத்திலும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பமுடியாது எனத் தெரிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்