Paristamil Navigation Paristamil advert login

சர்வதேச வர்த்தக கண்காட்சியில் Electric Air Taxiயை காட்சிப்படுத்திய Hyundai நிறுவனம்...

சர்வதேச வர்த்தக கண்காட்சியில் Electric Air Taxiயை காட்சிப்படுத்திய Hyundai நிறுவனம்...

15 தை 2024 திங்கள் 12:06 | பார்வைகள் : 1257


Hyundai Motor Group அதன் புதிய Air Taxi மொடலான S-A2 வின் முன்மாதிரியை உலகின் மிகவும் பிரபலமான தொழில்நுட்ப நிகழ்ச்சியான CES 2024ல் வெளியிட்டது.

உலகளவில் போக்குவரத்து பிரச்சனைகள் அதிகரித்து வரும் நேரத்தில் ஏர் டாக்சிகள், அதிலும் மின்சார ஏர் டாக்சிகள் கூட மிக முக்கியமானதாக மாறும்.

எனவே, உலகளாவிய மின்சார பறக்கும் டாக்ஸி சந்தையில் நுழைவதற்கான முயற்சிகளை முடுக்கி விடுவதாக Hyundai நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், லாஸ் வேகாஸில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சியில் ஹூண்டாய் நிறுவனத்தின் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஏர் டாக்சி யூனிட் Supernal அதன் S-A2 மொடலை வெளியிட்டது. 

Supernel நிறுவனத்தில் முந்தைய S-A1 விஷன் கான்செப்ட்டின் அடிப்படையில், இந்த புதிய S-A2 ஏர் டாக்சியை Supernel நிறுவனம் அதன் புதுமையான aerospace engineering மற்றும் Hyundai Motor Groupன் வாகன வடிவமைப்பை ஒன்றிணைத்து, நகர்ப்புறங்களில் உள்ள மக்களுக்கு ஒரு புதிய வகை போக்குவரத்தை உருவாக்கும் முயற்சியில் வடிவமைத்துள்ளது.

2028ஆம் ஆண்டு இந்த ஏர் டாக்சியை தயாரிக்க தொடங்கவுள்ளதாகவும், அதற்குள் ​​வணிக ரீதியான விமானப் பாதுகாப்பு நிலைகளை அடையவும், அதன் வாகனங்களை மலிவு விலையில் உற்பத்தி செய்யவும் செயல்படுவோம் என Supernal நிறுவனம் கூறியுள்ளது.

S-A2 என்பது V-tail விமானம் ஆகும், இது பொது நகர்ப்புற போக்குவரத்து தேவைகளுக்காக மணிக்கு 120 மைல் வேகத்தில் 1,500 அடி உயரத்தில் பறக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு distributed electric propulsion architecture கட்டமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் eight all-tilting rotorகளைக் கொண்டுள்ளது.

இது vertical-lift மற்றும் horizontal-cruise ஆகிய இரண்டு கட்டங்களிலும் இணையற்ற செயல்திறனுடன் வாகனத்தை இயக்குகிறது என Hyundai கூறுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்