Livret : சேமிப்புக்கணக்கின் வட்டி வீதம் குறைப்பு!!
15 தை 2024 திங்கள் 14:43 | பார்வைகள் : 4169
பிரான்சின் பிரபலமான வங்கி சேமிப்புக்க்கணக்கான Livret d'épargne populaire (LEP) இன் வட்டி வீதம் குறைக்கப்பட உள்ளது.
பெப்ரவரி 1 ஆம் திகதியில் இருந்து இந்த வட்டி வீதம் குறைக்கப்பட உள்ளதாகவும், தற்போது 6% சதவீதமாக இருக்கும் வட்டி, பெப்ரவரி மாதம் முதல் 5% சதவீதமாக குறைக்கப்பட உள்ளது.
அதேவேளை, Livret A கணக்கின் வட்டி வீதம் தொடர்ந்தும் 3% சதவீதமாகவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டிக்குறைப்பினால் கிட்டத்தட்ட 10.7 மில்லியன் பேர் பாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சேமிப்புக்கணக்குகளானது தானியங்கி முறையில் ஆண்டுக்கு இரு தடவைகள் வட்டி வீதம் கணக்கிடப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.