Paristamil Navigation Paristamil advert login

Deepfakeயில் சிக்கியதால் பதறிய சச்சின் டெண்டுல்கர்

Deepfakeயில் சிக்கியதால் பதறிய சச்சின் டெண்டுல்கர்

16 தை 2024 செவ்வாய் 08:32 | பார்வைகள் : 1087


இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் Deepfake வீடியோவில் சிக்கியுள்ளது பரபரப்பாகியுள்ளது.

சச்சின் டெண்டுல்கர் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. 

அதில் அவர், தனது மகள் சாரா ஒன்லைன் வீடியோ கேம் மூலமாக பணம் சம்பாதித்து வருவதாகவும், ரசிகர்களான நீங்களும் அதனை பயன்படுத்தலாம் எனவும் கூறுகிறார். 

இந்த நிலையில், சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தன் மகள் குறித்து பேசுவதுபோல் வெளியான வீடியோ போலியானது என்று விளக்கம் அளித்துள்ளார். 

அவரது பதிவில், 'இந்த வீடியோக்கள் போலியானவை. இது உங்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. 

தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது கவலையாக இருக்கிறது.

இதுபோன்ற வீடியோக்கள், விளம்பரங்கள் மற்றும் பயன்பாடுகள் ஆகியவற்றை அதிக எண்ணிக்கையில் புகாரளிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

சமூக ஊடக தளங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் புகார்களுக்கு பதிலளிக்க வேண்டும். 

தவறான தகவல் மற்றும் Deepfakes பரவுவதைத் தடுக்க அவர்களின் முடிவில் இருந்து விரைவான நடவடிக்கை முக்கியமானது' என் தெரிவித்துள்ளார். 

முன்னதாக நடிகை ராஷ்மிகா மந்தனா, கஜோல் ஆகியோரை deepfake செய்தும் வீடியோக்கள் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.  

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்