ஜெர்மன் விவசாயிகளால் ஸ்தம்பித்த பெர்லின் நகரம்
16 தை 2024 செவ்வாய் 08:51 | பார்வைகள் : 1783
ஜெர்மனியில் விவசாயிகள் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.
ஜெர்மனியில் விவசாய மானிய வெட்டுகளைக் கண்டித்து ஒரு வார காலமாக தலைநகர் பெர்லினை தங்களது போராட்டங்களின் மூலம் ஜெர்மன் விவசாயிகள் ஸ்தம்பிக்க வைத்துள்ளனர்.
டிராக்டர்களைக் கொண்டு நாடு முழுவதிலும் நெடுஞ்சாலைகள் அடைக்கப்பட்டன.
கடந்த டிசம்பரில் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து, விவசாய வாகனங்களுக்கான வரிச்சலுகையை நீக்குவது குறித்த முடிவை அரசு மாற்றியது.
டீசல் மானியம் உடனடியாக நிறுத்தப்படுவதற்கு பதிலாக மூன்று ஆண்டுகளில் படிப்படியாக குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த சலுகைகள் போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.