இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் - பலி எண்ணிக்கை அதிகரிப்பு
16 தை 2024 செவ்வாய் 10:06 | பார்வைகள் : 3191
இஸ்ரேலில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமான ஹமாஸ் தாக்குதலை மேற்கொண்டது.
இந்நிலையில் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பு அழியும் வரை போரை நிறுத்த மாட்டோம் என்று உறுதியளித்துள்ளது.
இந்த போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் காசா மருத்துவமனைகளுக்கு தாக்குதலில் பலியான 132 பேரில் உடல்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
போரில் ஏறத்தாழ 8000 ஹமாஸ் போராளிகள் மற்றும் 24,100 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 60,834 பேர் காயமுற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த போர் நிறுத்தம் தொடர்பில் இஸ்ரேலின் பொருளாதார மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர் பர்கட் கருத்து தெரிவிக்கையில்,
எங்கள் நாட்டில் அனைவரின் குறிக்கோளும் போரை வென்று, பணய கைதிகளை மீட்க வேண்டும் என்பதே ஆகும். எந்த நிபந்தனையும் இன்றி அவர்கள் சரணடைய வேண்டும்.
எங்கள் நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணய கைதிகள் அனைவரும் ஒப்படைக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் உடன்பட்டு ஹமாஸ் அமைப்பினர் தான் வெள்ளை கொடி காட்ட வேண்டும்.
இல்லையென்றால் போர் தொடரும். இதை தவிர வேறு எந்த மாற்று வழியும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.