Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : தொழிற்கல்வி பாடசாலைக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்! - முன்னாள் மாணவன் கைது!!

பரிஸ் : தொழிற்கல்வி பாடசாலைக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்! - முன்னாள் மாணவன் கைது!!

16 தை 2024 செவ்வாய் 10:31 | பார்வைகள் : 2742


தொழிற்கல்வி பாடசாலை ஒன்றுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த முன்னாள் மாணவன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பரிஸ் 15 ஆம் வட்டாரத்தின் rue Lecourbe வீதியி உள்ள Louis-Armand தொழிற்கல்வி பாடசாலைக்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அதையடுத்து காலை 9 மணி அளவில் பாடசாலையில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்த எச்சரிக்கை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவர்கள் தலையிட்டு பாடசாலையினை வெளியேற்றியிருந்தார்கள். பின்னர் பாடசாலைக்குள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த பாடசாலையில் பயின்ற முன்னாள் மாணவன் ஒருவர் காவல்துறையினரை தொடர்புகொண்டு தான் பாடசாலை வளாகத்துக்குள் வெடிகுண்டினை புதைத்து வைத்துள்ளதாக தெரிவித்ததை அடுத்தே, மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்