Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் பட்டினியாக இருந்த இளைஞன் - பரிதாபமாக உயிரிழப்பு

இலங்கையில் பட்டினியாக இருந்த இளைஞன் - பரிதாபமாக உயிரிழப்பு

16 தை 2024 செவ்வாய் 14:43 | பார்வைகள் : 6975


கண்டி, கம்பளை பிரதேசத்தில் பாக்கு பறிப்பதற்காக பாக்கு மரம் ஒன்றில் ஏறிய இளைஞன் மரத்திலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கண்டி, கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய  இளைஞராவார்.

இவர் இரு நாட்களாக உணவின்றி பட்டினியாக இருந்துள்ளதாக மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர் உணவின்றி பட்டினியாக இருந்த நிலையில் பாக்கு பறிப்பதற்கு மரத்தில் ஏறியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்