Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் இணையப் பாதுகாப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்கு கோரிக்கை!

இலங்கையில் இணையப் பாதுகாப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்கு கோரிக்கை!

16 தை 2024 செவ்வாய் 16:05 | பார்வைகள் : 6902


இணையப் பாதுகாப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்காக ஆசிய இணையக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

முன்னதாக குறித்த சட்டமூல யோசனையில் விரிவான திருத்தங்கள் மற்றும் மறுசீரமைப்புகள் அவசியம் என்று உலகில் உள்ள இணையம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அதன் உறுப்பினர்களை உள்ளடக்கிய ஆசியா இன்டர்நெட் கோலியேசன் அமைப்பு, இலங்கை அராசங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை தமது குழு ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அவற்றை உரிய முறையில் ஆய்வு செய்ததன் பின்னர் முடிந்தவரை இடமளிக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த யோசனை, இந்தமாத இறுதியில் சபையில் விவாதம் மற்றும் சட்டமாக்கலுக்கு எடுத்துக்கொள்ளப்படும் வகையில் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்