Paristamil Navigation Paristamil advert login

இல்-து-பிரான்சுக்குள் இன்று முதல் கடும் பனிப்பொழிவு! - போக்குவரத்து பாதிப்பு!

இல்-து-பிரான்சுக்குள் இன்று முதல் கடும் பனிப்பொழிவு! - போக்குவரத்து பாதிப்பு!

16 தை 2024 செவ்வாய் 16:17 | பார்வைகள் : 5056


ஜனவரி 16, இன்று செவ்வாய்க்கிழமை இல் து பிரான்ஸ் மாகாணம் முழுவதிலும் கடும் பனிப்பொழிவு இடம்பெறும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.

இன்று இரவு ஆரம்பமாகும் பனிப்பொழிவு நாளை புதன்கிழமையும் தொடர்கிறது. கிட்டத்தட்ட 70% சதவீதமான இல் து பிரான்ஸ் நிலப்பகுதி முழுவதிலும் பனிக்கொட்டும் எனவும், வீதிகள் முழுவதும் பனி நிறைந்து போகுவரத்து பாதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-4°C சில பகுதிகளில் குளிர் நிலவும் எனவும், N118, A12 மற்றும் A13 வீதிகளில் அதிக பனிப்பொழிவின் காரணமாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாளை புதன்கிழமை அதிகபட்சமாக 5 செ.மீ உயரம் வரை பனிப்பொழிவு இடம்பெறும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்