பிரான்சில் Nantes பகுதியில் தன் மாற்றுத்திறனாளி மகளை கொலை செய்த தந்தை.
16 தை 2024 செவ்வாய் 17:27 | பார்வைகள் : 8768
பிரான்சில் Nantes பகுதியில் உள்ள Saint - Herblain நகரில் வசிக்கும் 64 வயதான தந்தை ஒருவர், தனது 28 வயதான மாற்றுத்திறனாளி மகளை தங்கள் வீட்டின் வாகனத் தரிப்பிடத்தில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் ஒன்று நேற்று (15/01) திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது.
அயலவர்களிடமிருந்து கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் அவர்களின் வீட்டு வாகனத் தரிப்பிடத்தில் சென்று பார்த்த பொழுதும் இரண்டு உடல்களையும் தந்தை எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
தனது மனைவியை அண்மையில் பறிகொடுத்த குறித்த நபர், தனது 28 வயதான மாற்றுத்திறனாளி மகளை தனது மற்றைய பிள்ளைகளுக்கு பாரமாக விட்டுச் செல்ல விரும்பாமலே, மகளையும் கொலைசெய்து, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan