இலங்கையில் அச்சுறுத்தும் டெங்கு நோய் தொற்று!

17 தை 2024 புதன் 03:24 | பார்வைகள் : 3091
இலங்கையில் டெங்கு நோயினால் நாளொன்றுக்கு 380 பேர் பாதிக்கப்படுவதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
நுளம்புளகால் பரவும் டெங்கு நோய் நாடளாவிய ரீதியில் ஆபத்தாக மாறியுள்ளது.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகின்றனர்.
2023 ஆம் ஆண்டில் 88,398 டெங்கு நோயாளர்கள் மற்றும் 58 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். சுமார் 11,498 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனிடையே, 71 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக ஆபத்துள்ள வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதேநேரம், பதிவாகும் டெங்கு நோயாளர்களை விட அதிகமானோர் சமூகத்தில் இருக்கலாம் என டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில்7ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையில் விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தை சுகாதார அமைச்சு பிரகடனப்படுத்தியது.
தற்போதுள்ள டெங்கு அபாயத்தை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
எனினும் அடையாளம் காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கனிசமான முறையில் அதிகரித்து வருகின்றது.