தலைவராகவும், முதல்-அமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் - எம்.ஜி.ஆருக்கு பிரதமர் மோடி புகழாரம்

17 தை 2024 புதன் 03:34 | பார்வைகள் : 4722
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி எம்.ஜி.ஆருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-
இன்று எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவரது வாழ்க்கையை நினைவு கூர்ந்து கொண்டாடுகிறோம். அவர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராகவும் இருந்தார். அவரது படங்கள், குறிப்பாக சமூக நீதி குறித்த படங்கள் வெள்ளித்திரையை தாண்டி இதயங்களை வென்றன.
தலைவராகவும், முதல்-அமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது பணி தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.