ஐசிசி உலக கோப்பை தொடர்.. இந்தியா - பாகிஸ்தான் போட்டி மாற்றம்
26 ஆடி 2023 புதன் 09:45 | பார்வைகள் : 3845
எதிர்வரும் அக்டோம்பர் மாதம் தொடங்க இருக்கும் ஐசிசியின் உலகக்கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் அக்டோம்பர் 15ம் திகதி ஐசிசியின் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
இத்தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அக்டோபர் 15ம் திகதி முதல் நவம்பர் 12ம் திகதி வரை இத்தொடரில் லீக் சுற்றுப்போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்திய அணி 9 மைதானங்களில் கடந்த மாத இறுதியில் ஐசிசி உலகக்கோப்பைத் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது.
அதில் அக்.5ஆம் தேதி முதல் நவ.12ஆம் திகதி வரை லீக் சுற்றுப் போட்டிகள் நடக்கவுள்ளது. இதில் 45 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.
அக்டோம்பர் 15ம் தேதி உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை பாகிஸ்தான் எதிர்த்து விளையாட உள்ளது.
இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தனர்.
இந்தப் போட்டியை காண்பதற்காக இப்போதே ரசிகர்கள் அகமதாபாத்தை சுற்றியுள்ள ஓட்டல்களில் புக் செய்துவிட்டனர்.
இன்னும் சிலரோ மருத்துவமனையில் முன்பதிவு செய்யலாமா என்று திட்டமிட்டு வருகின்றனர்.
ஐசிசி உலகக்கோப்பைத் தொடரில் அக்.15ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி, திகதி மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ மற்றும் ஐசிசி நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டத்தை திகதி மாற்றம் செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தச் செய்தி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டல்களில் ஆயிரக்கணக்கானோர் பணம் கொடுத்து முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.
திகதி மாற்றம் செய்யப்பட்டால் ஓட்டல்களில் முன்பதிவு செய்தவர்கள் பாடு பெரும்பாடுதான்.