Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானில் கோர  விபத்து....!

ஜப்பானில் கோர  விபத்து....!

17 தை 2024 புதன் 06:06 | பார்வைகள் : 5004


ஜப்பானில் இரு விமானங்கள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் பயணிகளுக்கு எவ்வித தீங்கும் இடம்பெற வில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானின் வடக்கு ஹோக்காய்டோ மாகாணம் சப்பரோ தீவில் உள்ள நியூ சித்தோஸ் விமானநிலையத்தில் இருந்து தென்கொரியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று 289 பயணிகளுடன் புறப்பட தயாரானது.

விமான ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டு வானில் எழும்ப முயன்றபோது அங்கே பயணிகள் யாரும் இல்லாமல் நின்று கொண்டிருந்த கேத்தே பசிபிக் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்துடன் மோதியது.

இந்த விபத்து காரணமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனினும் தென்கொரிய விமானத்தின் முன்பக்க இறக்கையில் சேதம் அடைந்தது. இதனால் கொரிய விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டு வேறுவிமானம் மூலம் பயணிகள் அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் ஜப்பானின் சிவில் விமான போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்