Paristamil Navigation Paristamil advert login

பாதுகாப்பு ஒப்பந்தம் - உக்ரேனுக்கு பயணமாகும் ஜனாதிபதி மக்ரோன்!

பாதுகாப்பு ஒப்பந்தம் - உக்ரேனுக்கு பயணமாகும் ஜனாதிபதி மக்ரோன்!

17 தை 2024 புதன் 08:04 | பார்வைகள் : 4653


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வரும் பெப்ரவரி மாதம் உக்ரேனுக்கு பயணமாக உள்ளார். 

நேற்று ஊடகசந்திப்பில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பங்கேற்றிருந்தார். அதன்போதே தனது உக்ரேன் பயணம் குறித்து தெரிவித்தார். தலைநகர் கீவ்வுக்கு பெப்ரவரி மாதத்தில் மக்ரோன் பயணிக்கிறார்.

கீவ்வுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் பாதுகாப்பு ஒப்பந்தம் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்ததை அடுத்து, அடுத்த மாதம் ஜனாதிபதி மக்ரோன் மேற்கொள்ள உள்ள பயணத்தின் போது அதனை புதுப்பிப்பார் என அறிய முடிகிறது. 

அதேவேளை, உக்ரேன்-இரஷ்யா யுத்தத்தில் இரஷ்யாவை வெற்றிபெற செய்யாமல் இருக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் வரும் வாரங்களில், மாதங்களிலில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து பிரான்ஸ் மேற்கொள்ளும் எனவும் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்