Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற நிலையில் விபத்துக்குள்ளான வேன்

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற நிலையில் விபத்துக்குள்ளான வேன்

26 ஆடி 2023 புதன் 09:46 | பார்வைகள் : 7143


வெள்ளவாய - கொஸ்லந்த பிரதான வீதியில் கொஸ்லந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹீவல்கதுர பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

புதன்கிழமை காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.    

விபத்தின் போது, வேனில் சாரதி மற்றும் நான்கு பயணிகள் பயணித்துள்ளதுடன், விபத்தில் எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேன் பலத்த சேதமடைந்துள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்