ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களுக்கு - தேசிய அஞ்சலி! - திகதியினை அறிவித்த ஜனாதிபதி!!
17 தை 2024 புதன் 10:00 | பார்வைகள் : 2153
ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களுக்கான தேசிய அஞ்சலி நிகழ்வு வரும் பெப்ரவரி மாத ஆரம்பத்தில் இடம்பெறும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார். அதன்போதே இதனை அவர் குறிப்பிட்டார். இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் மூன்று மாதங்களுக்கு முன்னர் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலில் 41 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
கொல்லப்பட்டவர்களுக்கான தேசிய அஞ்சலி நிகழ்வு Esplanade des Invalides பகுதியில் வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறும் என ஜனாதிபதி மக்ரோன் குறிப்பிட்டார். அதில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பினரால் பிடித்துச் செல்லப்பட்ட பிரெஞ்சு பணயக்கைதிகளில் பலர் விடுவிக்கப்பட்டுள்ள போதும், மேலும் மூவர் இன்னும் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை உயிருடன் மீட்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் பிரான்ஸ் மேற்கொண்டுவருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.