பரிசில் நீண்ட காலமாக வீதிகளில் வசித்த இருவர் மரணம். இது கவலையளிக்கிறது. Médecins du Monde.
17 தை 2024 புதன் 10:01 | பார்வைகள் : 6668
எல்லைகள் அற்ற மருத்துவர்கள் 'Médecin du Monde' பிரான்ஸ் அரசை வன்மையாக கண்டித்துள்ளது. இவ்வாண்டு ஆரம்பித்து இரண்டாம் நாளே 2 ஜனவரி சுமார் இருபது ஆண்டுகள் வீதியில் வசித்துவந்த 50 வயது நபர் ஒருவர் மருத்துவமனையில் சாவடைந்தார், அடுத்து சுமார் பத்து ஆண்டுகள் வீதியில் வசித்துவந்த 61 வயதுடைய நபர் ஒருவர் கடந்த ஜனவரி 9ம் திகதி மருத்துவமனையில் சாவடைந்தார். இவ்விரு மரணங்களும் பிரான்ஸ் தேசம் மனிதனேயத்தில் சரிவடைந்து வருவதை காட்டுவதாக எல்லைகள் அற்ற மருத்துவர்கள் சங்கம் கண்டித்துள்ளது.
பிரான்சில் சுமார் 550 000 பேர் வீடற்றவர்களாக வாழ்கிறார்கள், அவர்களுக்கு இந்த கடும் குளிர்காலத்தில் 120 மில்லியன் யூரோ நிதி ஒதுக்கி 200 000 பேருக்கு தற்காலிக தங்கிடங்கள் செய்து கொடுக்கப்பட்டதாகவும், அவசரகால தங்குமிடங்கள் இரட்டிப்பு செய்யப்பட்டதாகவும். பிரதமர் நாடாளுமன்றத்தில் கூறினார், அப்போ மீதமுள்ள மனிதர்களின் நிலை என்ன எனவும் மருத்துவர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இன்றைய நிலையில் வீடற்றோர் நிலை இப்படி இருக்கும் போது, வரவிருக்கும் குடியேற்ற வாசிகளை மட்டுப்படுத்தும் சட்டம் அமூலானால் நிலமை மேலும் மோசமடையும் எனவும் எல்லைகள் அற்ற மருத்துவர்கள் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan