பாரிஸ் நகரசபை தேர்தலில் போட்டியிடவுள்ள Rachida Dati . அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா?
17 தை 2024 புதன் 10:02 | பார்வைகள் : 7451
கடந்த வாரம் புதிய பிரதமர் Gabriel Attal தலைமையிலான அமைச்சரவையில் கலாச்சாரம் அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்ட Rachida Dati, ஒரு வாரத்திற்குள் நான் எதிர்வரும் 2026 நடைபெறவுள்ள பாரிஸ் நகரசபையின் முதல்வர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக இன்று அறிவித்துள்ளார்.
Nicolas Sarkozy அவர்கள் அரச தலைவராக இருந்த போது நீதி அமைச்சராக பதவிவகுத்த வலதுசாரி சார்புடைய Rachida Dati கடந்த வாரம் Emmanuel Macron அவர்களால் அமைச்சராக நியமிக்கப்பட்ட போது பெரும் விமர்சனங்களை அரசியல் வட்டத்தில் சந்தித்திருந்தார்.
இன்றைய அவரின் அறிவிப்பு மீண்டும் அவர் மீதான விமர்சனங்களை அதிகரித்துள்ளது. "Rachida Dati அமைச்சராக பதவிவகுக்க சம்மதித்ததே மங்கிப் போன தன் செல்வாக்கை, விளம்பரத்தை அமைச்சு பதவிக்காலத்தில் அதிகரித்து நகர சபைத் தேர்தலில் போட்டியிடத்தான்" என அரசியல் வட்டங்களில் விமர்சிக்கப்படுகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan