நடிகர் மகேஷ் பாபுவின் அதிரடி!
17 தை 2024 புதன் 11:17 | பார்வைகள் : 1899
'குண்டூர் காரம்' படத்திற்கு பிறகு புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில், குருஜி என தெலுங்கு சினிமாவில் அழைக்கப்படும் பிரபல இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குண்டூர் காரம்'.
இந்த படத்தில் ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனேஜ் பரம ஹம்சா ஒளிப்பதிவில், தமன் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 12-ம் தேதி பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.
விமர்சகர்களால் நிரகாரிக்கபட்டாலும், ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இப்படம் வெளியான 5 நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் தொடர்ந்து 5வது முறையாக மகேஷ்பாபுவின் படம் 100 கோடியை கடந்துள்ளது.
'குண்டூர் காரம்' திரைப்படத்தில் நடிகர் மகேஷ் பாபு பீடி பிடிக்கும் காட்சிகள் அதிகம் இருந்தது. ஸ்டைலிஷாக இருந்தாலும், அது ஒரு பக்கம் சர்ச்சையானது. இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய மகேஷ் பாபு இந்த பீடி பிடிக்கும் காட்சி குறித்து விளக்கம் அளித்துள்ளார்
. அதில், " 'குண்டூர் காரம்' திரைப்படத்தில் நான் பிடித்தது வழக்கமான பீடி கிடையாது. அது லவங்க இலைகளால் செய்யப்பட்ட ஆயுர்வேத பீடி. முதல்முறை ஒரிஜினல் பீடி பயன்படுத்திய சிறிது நேரத்தில் தலைவலி வந்துவிட்டது. பின்னர் தான் இந்த ஆயுர்வேத பீடியை கொடுத்தார்கள். அது நன்றாக இருந்ததால் படம் முழுவதும் பயன்படுத்தினோம். இந்த படத்திற்குப் பிறகு புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன். அதனை ஊக்குவிக்கவும் மாட்டேன்" என்று கூறியுள்ளார்.
ஆனால், சமூக வலைதளங்களில் சிலர், நீங்கள் புகைபிடிக்க மாட்டீர்கள் என்றால், அதனை திரையில் காட்டாதீர்கள் என விமர்சனம் செய்து வருகின்றனர்.