கனடாவை அச்சுறுத்தும் பால்வினை நோய்-WHO எச்சரிக்கை
26 ஆடி 2023 புதன் 09:53 | பார்வைகள் : 17940
கனடா உள்ளிட்ட சில நாடுகளில் ஆபத்தான பால்வினை நோய்களில் ஒன்றான குளோரியா தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது காணப்படும் பால்வினை நோய் சிகிச்சை முறைமைகளுக்கு கட்டுப்படாத புதிய வகை நோய் தொற்று ஒன்று பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொவிட் 19 நோய் தொற்று காரணமாக அநேகமான நாடுகளில் பால்வினை நோய்கள் தொடர்பில் உரிய முறையில் பரிசோதனை நடத்தவும் சிகிச்சை அளிக்கவும் காலதாமதம் ஏற்பட்டதாகவும் இந்த நிலையின் எதிரொலியாகவே தற்பொழுது நோய் தொற்று பரவுகை அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களை விடவும் தற்பொழுது பால்வினை நோய்கள் குறிப்பாக கணோரியா அதிக அளவில் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சீனா, ஜப்பான், சிங்கப்பூர், வியட்நாம், ஆஸ்திரேலியா, கனடா டென்மார்க், பிரான்ஸ், அயர்லாந்து மற்றும் ஐக்கிய ராஜ்யம் ஆகிய நாடுகளில் இந்த புதிய வகை கணேரியா தொற்று பரவி வருவதாக உலகம் சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
எனவே பால்வினை நோய்த்தொற்று செய் தொடர்பில் மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒரு தசாப்த காலப்பகுதியில் களோரியா தொற்றாளர்கள் கனடாவில் மும்மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிக அளவில் ஆண்களுக்கு இந்த நோய் தொற்று பரவுவதாகவும் இதில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் 30 வயதிற்கும் குறைந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க தவறினால் ஆபத்துக்கள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan