Paristamil Navigation Paristamil advert login

தனுஷின் அடுத்த படம் தொடர்பில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..!

தனுஷின் அடுத்த படம் தொடர்பில்  அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..!

17 தை 2024 புதன் 15:17 | பார்வைகள் : 3946


தனுஷ் நடித்து முடித்த ’கேப்டன் மில்லர்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவரது அடுத்த படம் குறித்து மாஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது

நடிகர் தனுஷ் தற்போது தன்னுடைய 50வது படத்தை நடித்து இயக்கி முடித்துள்ளார். மேலும் தனுஷ் இயக்கத்தில் அவருடைய சகோதரி மகன் ஹீரோவாக நடித்து வரும் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த சூப்பர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை காலை 11.07 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தில் நாகார்ஜுனா முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்