2ஜி வழக்கு விசாரணையில் சாட்சிகள் தயார்படுத்தப்பட்டனர்:அண்ணாமலை
18 தை 2024 வியாழன் 02:25 | பார்வைகள் : 1476
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், '2ஜி' அலைக்கற்றை ஊழல் வழக்கில் சாட்சிகள் தயார்படுத்தப்பட்டனர்; அச்சுறுத்தப்பட்டனர்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'தி.மு.க., பைல்ஸ்' பாகம் மூன்றை சில தினங்களுக்கு முன் வெளியிட்டார்.அதில், 2ஜி வழக்கு தொடர்பாக, தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலு, முன்னாள் டி.ஜி.பி., ஜாபர்சேட் உரையாடல் இடம்பெற்றிருந்தது.
நேற்று, மூன்றாம் பாகத்தின் இரண்டாவது ஆடியோவை வெளியிட்டு உள்ளார்.இது தொடர்பாக, அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
'2ஜி' விசாரணையின் போது, சி.பி.ஐ., விசாரணையை தி.மு.க., எப்படி கையாண்டது என்பது பற்றிய உண்மையை ஆதாரங்களுடன் வெளியிடும் எங்கள் முயற்சியே இந்த ஆடியோ பதிவு. அடுத்தடுத்தும் அதிர்ச்சியளிக்கும் பல ஆதாரங்கள் அம்பலத்துக்கு வரும்.
தி.மு.க., பைல்ஸ் பாகம் - 3ன் இரண்டாவது ஆடியோவில், தி.மு.க., - எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராஜா, முன்னாள் டி.ஜி.பி., ஜாபர்சேட் இடையேயான உரையாடல் பதிவு இடம் பெற்றுள்ளது.
2ஜி வழக்கில் ராஜா முக்கிய குற்றவாளி.
வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்ய சாட்சிகள் தயார்படுத்தப்பட்டனர்; அச்சுறுத்தப்பட்டனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2ஜி விசாரணயை இப்படி தான் நடத்தியது.
ஊழலை மறைக்க நடத்தப்பட்ட செட்டப் நாடகங்கள் இத்துடன் முடிவதில்லை; தொடர்ந்து வெளிவரும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அண்ணாமலை வெளியிட்டுள்ள ஆடியோவில் ஆ.ராஜா, ஜாபர் சேட் உரையாடல் விபரம்:
ராஜா: எங்கே சார் இருக்கீங்க.
ஜாபர்சேட்: சார் சொல்லுங்க.
ராஜா: ஒண்ணும் இல்லை. நல்ல செய்தி தான், நல்லா போயிட்டிருக்கு.
ஜாபர்சேட்: வெரி குட் சார்.
ராஜா: அவர்கள் எல்லாம் வந்து போயிட்டாங்க. அவர்களே அதை ஒருங்கிணைத்து விட்டனர்.
ஜாபர்சேட்: சரிங்க சார்.
ராஜா: அவர்கள் பிரச்னையை நன்கு கண்காணித்தனர்.
ஜாபர்சேட்: நாம சொன்ன பிரச்னைகளா?
ராஜா: நம்ம பிரச்னைகள் எல்லாம் வராமா பார்த்துக்கறேன்னாங்க. வேற ஒரு அரெஞ்மென்ட்ல. நேற்று ஒருத்தர், 'ஜாயின்' பண்ணார்ல அவர்கிட்ட சொல்லி.
ஜாபர்சேட்: நேற்று யார் சார் ஜாயின் பண்ணாங்க.
ராஜா: அந்த அமைப்புக்கு தலைமை.
ஜாபர்சேட்: ஏபி. ஆமா, ஆமாம்...
ராஜா: நம்மாளுங்க வச்சு, பாம்பே ஆளுங்க நம்மாளுங்க வச்சு, ஆழ்வார்பேட்டையில் எதெல்லாம் வர வேண்டும், எதெல்லாம் வரக்கூடாது பார்மாலிட்டி போட்டு.
ஜாபர்சேட்: சரிங்க சார்.<br><br>ராஜா: கேள்வி கேளுங்க, ஆனால் கடுமையாக கேட்கக்கூடாது.
ஜாபர்சேட்: சரிங்க சார்
ராஜா: அதுமாதிரி முடிச்சுட்டாங்க
ஜாபர்சேட்: சரிங்க சார். வெரிகுட். யார் பேசுனாங்க.
ராஜா: ஸ்வான், யுனிடெக்.
ஜாபர்சேட்: அவங்க ரெண்டு பேரும்.
ராஜா: ரெண்டு பேரும் இப்ப நேரா வந்து, 'பென்ஸ்' காரில் வந்து பார்த்துட்டு, போயிட்டாங்க.
ஜாபர்சேட்: சரிங்க சார்.
ராஜா: ஒன்னுமில்லைனு நாங்க சொல்லிட்டோம், கவலைப்பட வேண்டாம்னு. ஒவ்வொன்றாக கேட்டனர். எங்களை 'அப்ரூவர்' ஆக்கிடுறேன். ஏதாவது சொல்ல
முடியுமான்னு கேட்டனர்.
ஜாபர்சேட்: சார்...
ராஜா: அதனால் என் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லுங்கள் என்றால், ஹரி சால்வேவை வைத்து கொண்டுள்ளனர்.
ஜாபர்சேட்: கொடுத்து இருக்காங்க.
ராஜா: ஹரி சால்வே டேக் ஓவர் செய்து, இவங்க பக்கம் சொல்ல வேண்டியதெல்லாம், ராஜாவை எப்படி தெரியும்,
அமைச்சரை எப்படி போய் பார்த்தீங்கனு எல்லாம் சொல்லி.
ஜாபர்சேட்: அந்த காப்பி மட்டும் கிடைச்சா நமக்கு.
ராஜா: நான் காப்பி வாங்க சொல்றேன்.
ஜாபர்சேட்: சரிங்க.தைரியாமாக வீட்டிற்கே வந்துட்டு, போயிட்டாங்க.
ராஜா: அவ்வளவு தான்.
ராஜா: அவர்கள், வேறு ஆபரேட்டர்கள் வாயிலாகவும் வேலை செய்றாங்க.
ஜாபர்சேட்: நல்லது சார், சரியாக இருக்கும்.<br><br>ராஜா: யுனிடெக், ஸ்வான் இருக்குல்ல.
ஜாபர்சேட்: ஆமாம் சார்
ராஜா: டேட்டா கான், வீடியோகான் இருக்குல்ல, அவர்களிடமும் இதை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. அதற்கு பின், எனக்கு கேள்விகள் கொடுப்பாங்களாம்,
இல்லைன்னா ஜென்டிலா கூப்பிடுவாங்களாம்.
ஜாபர்சேட்: அவ்வளவு தான் பார்த்துக்கலாம் சார். அதோடு முடிஞ்சது
ராஜா: அவர்கள், வெளிநாட்டிற்கு கூட போகவில்லையாம்; அவர்கள், எடிசாலாவிற்கு செல்ல விரும்புவதாக சொன்னார்கள்.
இவ்வாறு அந்த உரையாடல் பதிவாகி இருக்கிறது.