Paristamil Navigation Paristamil advert login

உலகின் வலிமையான முதல்10 கரன்சி பட்டியல் வெளியீடு!

உலகின் வலிமையான முதல்10 கரன்சி பட்டியல் வெளியீடு!

18 தை 2024 வியாழன் 09:41 | பார்வைகள் : 2079


அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ் உலகின் வலிமையான முதல் 10 கரன்சி பட்டியலையும், அவற்றின் வெற்றிக்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளது.

குவைத் தினார் ₹ 270.23 மற்றும் $3.25 என்ற மதிப்பில் முதல் இடத்தில் இருக்கிறது.

பஹ்ரைன் தினார் ₹ 220.4 மற்றும் $2.65 மதிப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

ஓமானி ரியால் ₹ 215.84 மற்றும் $2.60 விலையில் மூன்றாவது அதிக மதிப்புடையது.

இதைத் தொடர்ந்து ஜிப்ரால்டர் பவுண்ட், பிரிட்டிஷ் பவுண்ட், கேமன் தீவுகள் டாலர், சுவிஸ் பிராங்க் மற்றும் யூரோ போன்ற கரன்சிகள் பட்டியலில் வரிசைப்படுத்தபட்டு இருக்கிறது. 

மிகவும் பரவலாக வர்த்தகம் செய்யப்பட்டும், முதன்மை இருப்பு நாணயமாக இருந்தாலும், வலிமையான கரன்சியில் அமெரிக்க டாலர் கடைசியாக 10வது இடத்தில் உள்ளது. ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு₹ 83.10. 

ஒரு அமெரிக்க டாலருக்கு 82.9 என்ற மதிப்பில் இந்தியா 15வது இடத்தில் உள்ளது.

இதேவேளை, குவைத் தினார் அந்த நாட்டின் பொருளாதார நிலை, எண்ணெய் இருப்பு மற்றும் வரி இல்லாத அமைப்பு காரணமாக முதல் இடத்தை பிடித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்