கலாச்சார அமைச்சருடன் Clichy-sous-Bois நகருக்கு பயணமாகும் ஜனாதிபதி மக்ரோன்!

18 தை 2024 வியாழன் 10:07 | பார்வைகள் : 9213
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று வியாழக்கிழமை 93 ஆம் மாவட்டத்தின் Clichy-sous-Bois மற்றும் Montfermeil
நகரங்களுக்கு பயணமாக உள்ளார்.
அவருடன், பிரான்சின் கலாச்சார அமைச்சர் Rachida Dati உடன் பயணிக்கிறார். பிரான்சின் கலாச்சாரத்தினை மேம்படுத்தவும், புதிய மற்றும் சமகாலத்துக்கு ஏற்ற வகையில் கலாச்சாரத்தை உருவாக்கவும் இந்த பயணம் அமைகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழாம் வட்டார நகரமுதல்வராக இருந்த Rachida Dati , கேப்ரியல் அத்தாலில் அமைச்சரவையில் கலாச்சார அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். அமைச்சராக அவரது உத்தியோகபூர்வ முதலாவது பயணம் இதுவாகும்.
அதேவேளை, 2026 ஆம் ஆண்டு அவர் பரிஸ் நகர முதல்வர் தேர்தலில் போட்டியிட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.