மீண்டும் வெற்றிமாறனுடன் இணையும் நடிகர் சூரி
18 தை 2024 வியாழன் 15:20 | பார்வைகள் : 10018
தமிழ் சினிமாவில் "அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்டாக"தனது பயணத்தை துவங்கி, இன்று முன்னணி நாயகனாக மாறி இருக்கிறார் நடிகர் சூரி என்றால் அது மிகையல்ல. சினிமா மீது கொண்ட காதலின் காரணமாக மதுரையில் இருந்து புறப்பட்டு வந்து, கிடைத்த வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்தி, ஒவ்வொரு நாளும் தனது முன்னேற்றத்திற்காக உழைத்து இன்று முன்னணி ஆக்ஷன் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார் சூரி.
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பல சின்னஞ் சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்திருந்தாலும், கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான "வெண்ணிலா கபடி குழு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்று "பரோட்டா சூரி" ஆக புதிய ஒரு பரிமாணம் எடுத்தார் நடிகர் சூரி.
அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக மாறியது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் என்று தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து இவர் பல திரைப்படங்களில் கலக்கல் காமெடி புரிந்துள்ளது அனைவரும் அறிந்ததே. இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை என்கின்ற திரைப்படத்தில், ஆக்சன் ஹீரோவாக அறிமுகமாகி, முதல் திரைப்படத்திலேயே மக்களின் ஏகோபித்த பாராட்டுகளை பெற்றார்.
அதை தொடர்ந்து தற்பொழுது வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் மும்முரமாக நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் சூரி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நாளை மாலை 5 மணிக்கு இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாக உள்ளது.
இளைய இசை ஞானி யுவன் சங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் தான் இந்த திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் அவர்களும் சமுத்திரகனி அவர்களும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் மைம் கோபியும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan