Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் அறிமுகமாகும் புதிய விசா நடைமுறை

இலங்கையில் அறிமுகமாகும் புதிய விசா நடைமுறை

19 தை 2024 வெள்ளி 03:02 | பார்வைகள் : 1776


வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கான செயன்முறையை எளிதாக்கும் நோக்கில் இலங்கை தமது விசா முறையில் விரிவான மறுசீரமைப்பை மேற்கொள்கிறது.

வெளிநாட்டு முதலீடுகள், நிகழ்நிலை பணியாளர்கள் (digital nomads) மற்றும் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதனை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசா நீடிப்பு சிக்கல்களை நீக்குதல் உள்ளிட்ட முக்கிய மேம்பாடுகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய, பயணிகள் தமது தங்குமிடத்தை உள்ளடக்கிய வகையில் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, Nomad Visa நிகழ்நிலை தொழில் வல்லுநர்களை இலங்கையில் வாழத்தல் மற்றும் பணிபுரிவதற்கு அனுமதிக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 10 வருட முதலீட்டாளர் வீசாவும் அறிமுகப்படுத்தப்படும் என ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையை நிரந்தர வதிவிடமாக மாற்ற விரும்புவோருக்கு நிரந்தர வதிவிட விசா வழங்குவதற்கும் வழிவகுக்கப் பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மறுசீரமைப்பின் மூலம் இலங்கை வருடாந்தம் சுமார் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதுடன், பொருளாதாரத்தை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்த்த்துள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்