இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போர்! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
19 தை 2024 வெள்ளி 07:48 | பார்வைகள் : 3428
கடந்த வருடம் 7 ஆம் திகதி ஒக்டோபர் மாதம் முதல் காசாவில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந் நிலையில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 24,620-ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து காசா சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஹமாஸ் இற்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 172 போ் உயிரிழந்ததுடன் 326 போ் காயமடைந்தனா்.
இதுவரை 24,620 பேர் உயிரிழந்ததுடன் 61,830 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனா்.
அந்த மோதலின் உச்சகட்டமாக, இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்திய அவா்கள் அந்த நாட்டுக்குள் தரை, கடல், வான்வழியாக நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்ததுடன் 250 பேரை அங்கிருந்து அவா்கள் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.
அதையடுத்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிற நிலையில் உலக நாடுகள் போரி நிறுத்துமாறு இரு தப்பிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றன.