கனடாவில் மின்சாரம் தடைப்படும் சாத்தியம்
19 தை 2024 வெள்ளி 10:24 | பார்வைகள் : 7309
கனடாவில் கடுமையான குளிருடனான காலநிலை நிலவி வருகின்றது.
இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்படும் சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குளிருடனான காலநிலை காரணமாக வட அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கடும் குளிருடனான காலநிலையின் மாற்றத்தினால் மக்கள் அதிகளவு மின்சாரத்தை பயன்படுத்த நேரிட்டுள்ளதாகவும் இது நெருக்கடிகளை உருவாக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய சில ஆண்டுகளாகவே இவ்வாறான மின்சாரத்திற்கு தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan