Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் போலி தொழில் வாய்ப்பு மோசடிகள்  தொடர்பில் வெளியாகிய தகவல்

கனடாவில் போலி தொழில் வாய்ப்பு மோசடிகள்  தொடர்பில் வெளியாகிய தகவல்

19 தை 2024 வெள்ளி 10:29 | பார்வைகள் : 7421


கனடாவில் தொழில் வாய்ப்பு வழங்குவதாக போலியாகக் கூறி மக்கள் ஏமாற்றப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரும் எண்ணிக்கையிலான மோசடிகள் இணைய வழியில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொழில் வாய்ப்பு வழங்குவதாகக் கூறி, போலி காசோலைகள் மூலம் மோசடிகள் இழைக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டில் தொழில் வாய்ப்பு வழங்குவதாகக் கூறி கனடியர்களிடமிருந்து 7,218,534 டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டில் 27,682,309 டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளது.

கனடிய மோசடி தவிர்ப்பு நிலையத்தினால் இ;ந்த புள்ளிவிபரத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

போலி காசோலைகள் மூலம் மேற்கொள்ளப்படும் மோசடிகளுக்கு வங்கிகளும் பொறுப்பேற்கப் போவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இணைய வழியில் தொழில் வாய்ப்பு வழங்குவதாக செய்யப்படும் விளம்பரங்கள் தொடர்பில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.        
 

வர்த்தக‌ விளம்பரங்கள்